/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது விநியோகத்திட்ட குறைகேட்பு முகாம்
/
பொது விநியோகத்திட்ட குறைகேட்பு முகாம்
ADDED : பிப் 16, 2026 06:42 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, குடிமைப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றம் குறித்த மனுக்களையும், தங்கள் பகுதி ரேஷன் கடைகளில் அத்தியவசிய பொருள்கள் வழங்குவதில் உள்ள குறைபாடுகள், அத்தியவசிய பொருள்களின் தேவைகள் குறித்தும் மனுக்களை அளித்தனர்.
மனுக்கள் மீது, பொது விநியோகத்திட்ட போர்ட்டலில் பதிந்து, நடவடிக்கை எடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.

