ADDED : செப் 21, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைக்கான குறைகேட்பு முகாம் நடந்தது.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, குடிமைப் பொருள் தனி தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வருவாய் ஆய்வாளர்கள் நவீன்குமார், லெசிங்டன் உடனிருந்தனர்.
முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு நகல் கோருதல், மொபைல் எண் பதிவு, மாற்றம் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாகவும், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் மக்கள் மனுவாக வழங்கினர்.
