/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது விநியோக திட்டம் நாளை குறைகேட்புக் கூட்டம்
/
பொது விநியோக திட்டம் நாளை குறைகேட்புக் கூட்டம்
ADDED : மே 09, 2025 12:22 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 10ம் தேதி பொது விநியோக திட்டத்திற்கான குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 10ம் தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் குடிமை பொருள் தனி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெறுவதற்கான கோரிக்கையும், மொபைல் எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான தனி கோரிக்கை மனுவை வழங்கலாம்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகார சான்று கோரும் மனுவையும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியவாசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.