/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெறி நாய்கள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம்
/
வெறி நாய்கள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம்
ADDED : ஆக 29, 2025 12:12 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். புதுச்சேரியை ஒட்டி இருப்பதால் கோட்டக்குப்பம் பகுதி அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக இந்த பகுதியில் கடற்கரை அமைந்துள்ள தந்திராயன்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிகளில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் வெறி பிடித்து சாலையில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோரை துரத்திச்சென்று கடிப்பதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பழைய பட்டிணப்பாக்கம் பகுதியில் நாய்கள் சுற்றி திரிவதோடு, மக்களை துரத்துகிறது.  பொது மக்களின் நலன் கருதி, நகராட்சி அதிகாரிகள், தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

