/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
/
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 18, 2025 11:06 PM

விழுப்புரம் : வானுார் அடுத்த திருவக்கரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பத்தினர், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
மனு விபரம்:
நாங்கள், திருவக்கரை அண்ணா நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மன்னார்சாமி கோவில் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு வசித்து வருகிறோம். அங்குள்ள குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்கிறோம்.
ஏழ்மை நிலையில் வசித்து வரும் எங்களுக்கு, அரசு புறம்போக்கு இடத்திலேயே அரசு சார்பில் இலவச பட்டா வழங்க வேண்டும்.
அதற்காக, ஊராட்சி தலைவர் உள்ளிட்டோரிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
நாங்கள் வசிக்கும் இடம், நீர்நிலை புறம்போக்கு போன்ற தடை செய்யப்பட்ட இடமும் இல்லை.
அதனால், நாங்கள் வசிக்கும் இடத்தில், அரசு சார்பில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.