/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேமூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரூ. 2.29 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : மே 01, 2025 05:07 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி நேமூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ரூ. 2.29 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் வருவாய் துறை சார்பில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷே க் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, மக்களிடம் குறைகேட்பு மனுக்களை பெற்றார். ஒன்றியத்தைச் சேர்ந்த 487 பயனாளிகளுக்கு, ரூ. 2.29 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் பத்மஜா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி, டி.ஆர்.ஓ., ஹரிதாஸ், ஆர்.டி.ஓ., முருகேசன், செயற்பொறியாளர் ராஜா, தாசில்தார் யுவராஜ், சமூக நல தாசில்தார் வேல்முருகன், பி.டி.ஓ., க்கள் சையது முகமது, நாராயணன், செயல் அலுவலர் ேஷக் லத்தீப், ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் பாரதி சுரேஷ், மாவட்ட பொறியாளர் அணி சுரேஷ், விவசாய அணி அமைப்பாளர் ராஜா, கிளை நிர்வாகிகள் ரமேஷ், சாமுவேல், உதவி இயக்குனர்கள் கங்கா கவுரி, ஜெய்சன், அனைத்து துறை அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.