ADDED : செப் 27, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று பொதுத்துறை வங்கிகள் இயங்கின.
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வங்கிகள் செயல்படும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் இன்று 28ம் தேதி முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இதனால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக நேற்று ஞாயிறு அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகள் இயங்கின. இதில், பணம் எடுத்தல், பணம் டிபாசிட் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
