/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி காங்., பிரமுகர் கொலை வழக்கு; குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை திண்டிவனம் கோர்ட் தீர்ப்பு

ADDED : ஜன 31, 2025 12:28 AM

வானூர்; புதுச்சேரி காங்., பிரமுகர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
புதுச்சேரி பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் ஜோசப் (எ) ரவி,42; புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்., துணைத் தலைவராகவும், ஐ.என்.டி.யு.சி. மாநில துணைத்தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 30.7.2018ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றபோது, இரு பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு கும்பல் ஆரோவில் அருகே வழிமறித்து வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. படுகாயமடைந்த ஜோசப், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சற்று நேரத்தில் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில்,  ஆரோவில் போலீசார் பெரிய காலாப்பட்டு சந்திரசேகர், செல்வக்குமார், பார்த்திபன், பிள்ளைச்சாவடி விஸ்வநாதன், முகுந்தராஜ், குமரேசன், ஆனந்தன், தளபதி சங்கர், பெரிய காலாப்பட்டு மோகன், சண்முகம், கருவடிக்குப்பம் என். மோகன், சாண்டில், ஆரோவில் குயிலாப்பாளையம் மைக்கேல் ஏழுமலை, லாஸ்பேட்டை ராமு, பொம்மையார்பாளையலு சாயிலு ஆகிய 15 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது, திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1ல் கொலை வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சந்திரசேகர், மைக்கேல் ஏழுமலை ஆகியோர் இறந்து விட்டனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆதித்தன், குற்றவாளிகள் தரப்பில் பாபு ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், குற்றச்சாட்டுகள் நிருபிக்காததால், அனைவரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தார்.