/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் புதுச்சேரி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் புதுச்சேரி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் புதுச்சேரி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் புதுச்சேரி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : நவ 27, 2025 05:10 AM

விழுப்புரம்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரி வாலிபருக்கு, விழுப்புரம் கோர்ட்டில் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியை சேர்ந்தவர் 25 வயது பெண்; இவருக்கு, திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கடந்த ஜன., 29ம் தேதி பூஜை செய்ய தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வந்தார்.
அங்கு, இரவு பூஜை, பரிகாரம் செய்து முடித்துவிட்டு அந்த பெண்ணை, அவரது தாயுடன் கோவிலில் விட்டுவிட்டு உறவினர்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து, மறுநாள் 30ம் தேதி அவரது தாய், கோவிலுக்கு வெளியே சாப்பாடு வாங்க சென்றார்.
அப்போது, கோவிலில் தனியாக இருந்த பெண்ணிடம், புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட் பகுதியை சேர்ந்த ஜெயராம் மகன் குமார், 38; என்பவர், பேசி தன்னுடன் திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார். அங்கு, அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலியை விற்றும், அவருக்கு சாமியார் வேடமிட்டு ரயில் மூலம் 19 நாட்கள் சென்னை, டில்லி, ஹரித்துவார், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம்சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 3000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

