/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு; கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல்
/
பொன்முடி மீதான குவாரி வழக்கு; கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல்
பொன்முடி மீதான குவாரி வழக்கு; கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல்
பொன்முடி மீதான குவாரி வழக்கு; கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல்
ADDED : ஜூன் 05, 2025 07:39 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதி மீறி செம்மண் எடுத்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், தற்போது வரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய சதானந்தம், ஜெயச்சந்திரன், கோபிநாதன் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் சாட்சிகள் ஆஜராகவில்லை.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, வழக்கில் 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இதில், முன்பே 67 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 4 பேரை இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்த்து விசாரிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.