/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை ராகவன்பேட்டை மக்கள் அவதி
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை ராகவன்பேட்டை மக்கள் அவதி
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை ராகவன்பேட்டை மக்கள் அவதி
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை ராகவன்பேட்டை மக்கள் அவதி
ADDED : மே 06, 2025 05:11 AM

விழுப்புரம்: ராகவன்பேட்டையில்குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டை மெயின் ரோடு வழியாக லாரி, கார், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் ஏரளமாக செல்கின்றன.
கடந்த ஓராண்டிற்கு முன் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான குழாய்கள் புதைத்து மண்கள் கொட்டி சீரமைக்கப்பட்டது.
இதனால், சாலை குண்டும், குழியுமாக மாறியதால், மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. பள்ளம் தோண்டிய இடங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சிக்கிக்கொள்ளும் நிலை நீடித்து வருகிறது.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, ராகவன்பேட்டையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.