/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி வீட்டில் லஞ்ச ஒழி்ப்புத்துறை ரெய்டு
/
பொன்முடி வீட்டில் லஞ்ச ஒழி்ப்புத்துறை ரெய்டு
UPDATED : செப் 27, 2011 09:30 AM
ADDED : செப் 27, 2011 07:56 AM
விழுப்புரம்: மாஜி தி.மு.க., அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.அம்பிகாபதி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 6.45 மணியளவில் விழுப்புரத்தில் மாஜி அமைச்சர் பொன்முடியின் தம்பி தியாகராஜனின் மருத்துவமனையிலும் , சிகா அறக்கட்டளை நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. இதுதவிர சென்னையில், பொன்முடியின் மகன் சிகாமணி , வீடு அலுவலகத்திலும் ரெய்டு நடந்து வருகிறது. மேலும்ம் விழுப்புரத்தில் அவருடைய உறவினர்களுக்குச் சொந்தமான 15 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதனால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவுகிறது.