ADDED : ஏப் 09, 2025 03:47 AM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி : தினமலர் செய்தி எதிரொலியால் மேலக்கொந்தை ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி நடந்தது.
விக்கிரவாண்டி மேலக்கொந்தை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் முறையான பராமரிப்பு இல்லாததால் சாலை ஓரங்களில் மண் குப்பைகள் தேங்கி, பாலத்தின் மீது புற்கள் செடிகள் முளைத்திருந்தன.
இது குறித்த செய்தி தினமலரில் வெளியானது. இதையடுத்து மாவட்ட நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் தன்ராஜ் உத்தரவின்பேரில், மேம்பாலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. சாலை ஆய்வாளர் அன்புக்கொடி தலைமையில் சாலை பணியாளர்கள் ஜெயமூர்த்தி, நடராஜன், கோதண்டபாணி பாலத்தினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
