தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணி

ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணி

ரயில் தண்டவாளம் புனரமைப்பு பணி


ADDED : செப் 21, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் – புதுச்சேரி, கடலுார் மார்க்கங்களை இணைக்கும் ரயில்வே தண்டவாளங்களை புனரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விழுப்புரம் – புதுச்சேரி, கடலுார் மார்க்கங்களில் பாசஞ்சர், அதிவேக விரைவு ரயில்கள் செல்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மார்க்கங்களில் மாதம் தோறும் தண்டவாளம், பாயிண்ட்டுகள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்கும் பணிகளில் ரயில்வே பொறியியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கடலுார் மார்க்கங்களை இணைக்கும் பாயிண்ட்டுகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பகுதிகளில் நேற்று மாற்றும் பணிகளிலும், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஜல்லிகள் கொட்டுதல், ரயில்வே தொழில்நுட்ப இயந்திரம் மூலம் தண்டவாளங்களை புனரமைக்கும் பணிகளிலும் ரயில்வே பொறியியல் மற்றும் காங்கிமேன் பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us