ADDED : செப் 22, 2026 03:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி, கடலுார் மார்க்கங்களை இணைக்கும் ரயில்வே தண்டவாளங்களை புனரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் - புதுச்சேரி, கடலுார் மார்க்கங்களில் பாசஞ்சர், அதிவேக விரைவு ரயில்கள் செல்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மார்க்கங்களில் மாதம் தோறும் தண்டவாளம், பாயிண்ட்டு கள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்கும் பணிகளில் ரயில்வே பொறியியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
புதுச்சேரி, கடலுார் மார்க்கங்களை இணைக்கும் பாயிண்ட்டுகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள பகுதிகளில் நேற்று மாற்றும் பணிகளிலும், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஜல்லிகள் கொட்டுதல், ரயில்வே தொழில்நுட்ப இயந்திரம் மூலம் தண்டவாளங்களை புனரமைக்கும் பணிகளிலும் ரயில் வே பொறியியல் மற்றும் காங்கிமேன் பிரிவுகளைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.
