/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே தொழிற்சங்கம் செயற்குழு கூட்டம்
/
ரயில்வே தொழிற்சங்கம் செயற்குழு கூட்டம்
ADDED : மார் 16, 2025 11:19 PM
விழுப்புரம்; அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்கம் விழுப்புரம் கிளையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, கிளை செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கவுதமி வரவேற்றார். தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் இருசப்பன் சிறப்புரையாற்றினார்.
இதில், சங்க கோரிக்கையை ஏற்று விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை ெஹல்த் யூனிட்டாக மாற்றாமல், ஆள் குறைப்பு செய்யாமல் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி தந்த ரயில்வே சுகாதார சேவை பொது அதிகாரிக்கு நன்றி தெரிவித்தல், அம்பேத்கர் திருவுருவ சிலையை விழுப்புரம் ரயில் நிலையம் முகப்பு வாசலில் நிறுவ அனுமதி வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
துணை தலைவர் ராஜ்குமார், உதவி செயலாளர்கள் பாலாஜி, ராமமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.