UPDATED : நவ 11, 2026 04:56 PM
ADDED : நவ 11, 2026 04:52 PM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வே மஸ்துார் சங்கத்தின் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் ஓப்பன் லைன் தொழிற் சங்க கிளை செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். கோட்ட துணை செயலாளர் பிரசன்னா முன்னிலை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ரயில்வே நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்தும், ரயில்வே சட்ட விதிகளுக்கு முரணாக கீ மேன்களுக்கான நடக்கும் துாரத்தை குறைக்காமலும், ரயில்வே பாதைகளுக்கு ஏற்ப கேங்மேன் எண்ணிக்கையை கூட்டாமல் இருக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், ஊழியர்களுக்கு முறையான ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், தொழிலாளர்களுக்கு மொபைல் போன் வழங்காமல், சிம்கார்டு மட்டும் கொடுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
உதவி கோட்ட துணை தலைவர்கள் முத்துராஜா, இளையராஜா, ராமலிங்கம், ஆறுமுகம் உள்பட சங்கங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
