/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றுச்சூழல் பாதிப்பால் காலம் தவறிய மழை கலெக்டர் பேச்சு
/
சுற்றுச்சூழல் பாதிப்பால் காலம் தவறிய மழை கலெக்டர் பேச்சு
சுற்றுச்சூழல் பாதிப்பால் காலம் தவறிய மழை கலெக்டர் பேச்சு
சுற்றுச்சூழல் பாதிப்பால் காலம் தவறிய மழை கலெக்டர் பேச்சு
ADDED : ஏப் 19, 2025 01:22 AM
விழுப்புரம், ; சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக, காலம் தவறி மழை பெய்வதாக கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசினார்.
விழுப்புரம் அடுத்த செல்லங்குப்பத்தில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் அவர் பேசியதாவது;
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், இலவச சட்ட உதவி மையம் மூலம் தீர்வு காண்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாகவே, காலம் தவறி பொழியும் மழை, அதிகளவு மழை, கடும் வெப்பம் போன்றவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மரக்கன்றுகள் நட வேண்டும்.
தேசிய மற்றும் மாநில அளவில் 33 சதவீதம் பசுமையான சூழ்நிலைகள் உள்ளது. இதனை அதிகரித்திடும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நர்சரி மூலமாக மரக்கன்று வளர்க்கப்பட்டு பல்வேறு பகுதி களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், பல்வேறு பகுதிகளில் மரக்கன்று நட்டு பராமரிக்கபட்டு வருகிறது.
எனவே, ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, இலவச சட்ட உதவிகள் மையம் மூலம் சட்டப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

