ADDED : ஜூன் 18, 2026 04:13 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனத்தில் பெய்த கன மழையால், பொது மக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
திண்டிவனத்தில் நேற்று மாலை 4:00 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது,பள்ளி விடும் நேரத்தில் விடாது பெய்த மழையால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் தொடர்ந்த ஒன்றரை மணி நேரம் பெய்த மழையால் திண்டிவனத்திலுள்ள பிரதசான போக்குரவத்து சாலைகளில்,வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது. வேப்பஞ்சாலை உள்ளிட பல தெருக்களில் சாக்கடை கால்வாய் அடைப்பால், மழை நீரும், சாக்கடை நீரும் வீதிகளில் குளம் போல் தேங்கியது.இதனால் பொத மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள், சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள அடைப்புகளை சீர் செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
