/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு வயல்களில் மழை நீர் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
/
கரும்பு வயல்களில் மழை நீர் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
கரும்பு வயல்களில் மழை நீர் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
கரும்பு வயல்களில் மழை நீர் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
ADDED : அக் 18, 2024 07:12 AM
செஞ்சி: கரும்பு வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிக்க ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை அறிக்கை:
தற்போது ஆலைக்குட்பட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதோடு, தாழ்வான பகுதிகள், களிமண் வயல்கள் மற்றும் ஏரி பகுதிக்கு கீழ் உள்ள கரும்பு வயல்களில் அதிக தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் கரும்பு பயிருக்கு தேவையான வேர் சுவாசம் தடைபட்டு கணு இடைவெளி சிறுத்து, வளர்ச்சி பாதிக்கப்படும், இதிலிருந்து கரும்பு பயிரை பாதுகாக்க விவசாயிகள் வயலில் அதிகமாக தேங்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
இதற்காக வயலைச் சுற்றி ஒரு அடி ஆழத்திற்கு வடிகால் கிடங்கு ஏற்படுத்தி தண்ணீரை வடிக்க வேண்டும்.
நடவு வயல்களில் முளைப்பு பாதித்திருந்தால் கரணையோ அல்லது கரும்பு நாற்றுகளைக் கொண்டோ இடைவெளியை நிரப்ப வேண்டும்.
கட்டைக் கரும்பில் இடைவெளி இருந்தால் அதிக களைப்புள்ள துார்களை பெயர்த்து எடுத்து இடைவெளி நிரப்பவும் அல்லது நாற்றுகளை கொண்டு நிரப்ப வேண்டும்.
வளர்ந்த கரும்பாக இருந்தால் தண்ணீரை வடித்து பிறகு வயலில் களைகள் இருந்தால் களைக்கொல்லி தெளித்து களையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பிறகு ஏக்கருக்கு 1 மூட்டை யூரியா, 1 மூட்டை காம்ப்ளக்ஸ், அரை மூட்டை பொட்டாஷ், 5 கிலோ சமர்த்தா, 8 கிலோ கோரோஜன் கவர் குருணை மருந்து கலந்து குழியுரமாக இட வேண்டும். இவ்வாறு செய்தால் பயிரின் வளர்ச்சி அதிகரிப்பதோடு மகசூலும்அதிகரிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.