/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை
/
விழுப்புரம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை
ADDED : ஜூன் 11, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் சுற்றுப்பகு திகளில் நேற்று மாலை சூறைக் காற்றுடன் திடீர் மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. மாலை 6:00 மணிக்கு பிறகு, விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் தனர்.

