/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணம் கூட்ரோட்டில் மழைநீர் வெளியேற்றம்
/
மரக்காணம் கூட்ரோட்டில் மழைநீர் வெளியேற்றம்
ADDED : டிச 01, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோட்டில் தேங்கியிருந்த மழை நீர், நகராட்சி மூலம் அகற்றப்பட்டது.
திண்டிவனம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், மரக்காணம் கூட்ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக மழைநீர் வெள்ளம் போல் தேங்கியருந்தது.
அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா, கமிஷனர் குமரன் மேற்பார்வையில், கூட்ரோட்டிலுள்ள சாலையோர கால்வாயை பொக்கலைன் மூலம் உடைத்து, தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.