/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழைநீர் சேகரிப்பு பிரசாரம் துவக்கம்
/
மழைநீர் சேகரிப்பு பிரசாரம் துவக்கம்
ADDED : அக் 15, 2025 11:02 PM

விழுப்புரம்: மழைநீர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மின்னணு திரை விழிப்புணர்வு வாகன பிரசாரம் நேற்று துவங்கியது.
இந்த வாகனத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், கொடியசைத்து துவக்கி வைத்து, மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார்.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக, மழைநீர் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில், மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்த காணொலி குறும்படம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், மாவட்ட நிலநீர் ஆய்வாளர் பிரேமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.