
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் காங்., கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நகர தலைவர் சூரியமூர்த்தி தலைமையில் கட்சியினர் ராஜிவ் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர் லுார்து சாவியார், நிர்வாகிகள் விஜயகுமார், ராஜா, சபீர் ஜான் பாஷா, முனுசாமி, சேகர் பங்கேற்றனர்.
வட்டார காங்., சார்பில் என்.ஆர்.,பேட்டையில் வட்டார தலைவர் சக்திவேல் தலைமையில் ராஜிவ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விவசாய அணி மாவட்ட தலைவர் ஜோலாதாஸ், சிறுபான்மையினர் மாவட்ட தலைவர் சையத்மாலிக், விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் அரங்க சிவக்குமார், மாவட்ட செயலாளர் வேணுகோபால், செஞ்சி வட்டார விவசாய அணி தலைவர் அன்புசெழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.