/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: சுவர் விளம்பரம் 'ஜரூர்'
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: சுவர் விளம்பரம் 'ஜரூர்'
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: சுவர் விளம்பரம் 'ஜரூர்'
ராமர் கோவில் கும்பாபிேஷகம்: சுவர் விளம்பரம் 'ஜரூர்'
ADDED : ஜன 16, 2024 06:22 AM

தமிழகத்தில் வழக்கமாக ஆளுங்கட்சி, எதிர்கட்சி என பல்வேறு கட்சிகளின் தங்களின் தலைவர்களின் பிறந்த நாள், மாநாடு உள்ளிட்டவைகளுக்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போட்டி, போட்டிக்கொண்டு சுவர் விளம்பரம் செய்வது வழக்கமாக நடந்து வருகிறது.
தற்போது அரசியல் கட்சிகளுக்கு பதில் சொல்லும் வகையில், வரும் 22ம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிேஷகத்திற்கு அதிகளவில் விளம்பரம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே பா.ஜ., மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வீடு, வீடாக ராமர் கோவில் கும்பாபிேஷக அழைப்பிதழ், பிரசாதம் கொடுத்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ராமர் கோவில் கும்பாபிேஷக அறிவிப்பு சுவர்களில் பல்வேறு வண்ணங்களில் பளிச்சிடுவது பொது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.