/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராமதாஸ்-அன்புமணி மோதல் எதிரொலி: வரும் 8 ம் தேதி மாநில செயற்குழு கூட்டம்
/
ராமதாஸ்-அன்புமணி மோதல் எதிரொலி: வரும் 8 ம் தேதி மாநில செயற்குழு கூட்டம்
ராமதாஸ்-அன்புமணி மோதல் எதிரொலி: வரும் 8 ம் தேதி மாநில செயற்குழு கூட்டம்
ராமதாஸ்-அன்புமணி மோதல் எதிரொலி: வரும் 8 ம் தேதி மாநில செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 06, 2025 04:27 AM
திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பா.ம.க.,நிர்வாகக்குழு கூட்டத்தில்,வரும் 8 ம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவராக இருந்து வந்த அன்புமணியின் பதவியை பறித்து, அவருக்கு கட்சியின் செயல்தலைவராக பதவி வழங்கியதிலிருந்து, தந்தை, மகன் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது.
இந்த சூழ்நிலையில், கட்சியின் சட்டசபை கொறடாவாக ராமதாசால் அறிவிக்கப்பட்ட, சேலம் எம்.எல்.ஏ., அருளை நேற்று முன்தினம் சபாநாயகரிடம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் வழங்கிய கடிதத்தை கொடுத்தார்.
இதற்கடுத்து அன்புமணி தரப்பில், பா.ம.க.,செய்தி தொடர்பாளர் பாலு, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேருடன் நேரில் சென்று சபாநாயகரிடம், பா.ம.க.,வின் புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமாரை அன்புமணி நியமித்துள்ள கடிதத்தை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சட்டசபையில் பா.ம.க., இரண்டாக பிளவு பட்டது.
இந்த சூழ்நிலையில் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் அவசர நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தொடர்ந்து நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு, செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நிர்வாகக்குழு குழு கூட்டத்தில் மொத்தமுள்ள 19 பேரில், 17 பேர் கலந்து கொண்டனர். இதில்
கட்சியின் கவுரவ தலைவர் மணி, அருள் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், ஆசிரியர் பரந்தாமன், கவிஞர் ஜெயபாஸ்கரன், மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொது செயலாளர் ராம முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் அன்புமணியின், சமீபகால செயல்பாடுகள் குறித்து ராமதாஸ் வருத்தத்துடன் பேசினார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பா.ம.க.,வின் பழைய நிர்வாக குழு கலைக்கப்பட்டது. இதில் இருந்த திலகபாமா, வழக்கறிஞர் பாலு, வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட சிலர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
புதியதாக நியிமக்கப்பட்ட நிர்வாக குழுவில், அன்புமணி, மணி, அருள் எம்.எல்.ஏ., ஆசிரியர் பரந்தாமன், பேராசிரியர் தீரன், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் வரும் 8 ம் தேதி ஓமந்துாரிலுள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க.,வின் மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது முதற்கட்டமாக கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடந்துள்ளது. அடுத்து வரும் 8 ம் தேதி செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக பொதுக்கு கூட்டத்தைழு கூட்டும் முடிவில் ராமதாஸ் உறுதியாக உள்ளார்.
இதன் பிறகு, பா.ம.க.,வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது, அன்புமணி குறித்து கட்சியின் நிலைப்பாடு என்பதை ராமதாஸ் திட்டவட்டமாக அறிவிப்பார் என்று, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ----------
குழப்பம் தான் மிஞ்சும்
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியின் கவுரவ தலைவர் மணி நிருபர்களிடம் கூறியதாவது;
கட்சியின் நிறுவனர் ர் ராமதாஸோடு இறுதிவரை பயணம் செய்வது என உறுதியாக உள்ளேன்.பா.ம.க., தமிழ்நாட்டில் ஒரு வலிமையான கட்சியாக பேசப்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு குழப்பமான சூழ்நிலை காரணமாக என்னைபோலவே, கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கும் கடுமையான மன உளைச்சல் உள்ளது. ஒவ்வொரு நாளும் இரு தரப்பிலிருந்தும் வரக்கூடிய செய்திகள் கட்சியில் அனைவருக்கும் குழப்பத்தையும், வேதனையாகவும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாகும்.
இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசினால் தீர்வு ஏற்படும். பா.ம.க., பழைய நிலைமைக்கு வரவேண்டும். இதற்கு இருவரும் பேசி நல்ல தீர்வு எட்ட வேண்டும்.
கொறடா மாற்றுவதற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது, இதற்கு ராமதாசும் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். கொறடா தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது.
இன்னும் ஒராண்டு கூட பதவி இல்லை. இருவரும் பொறுப்பாளர்களை நியமிப்பதும், நீக்குவதும் தீர்வாக அமையாது. குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.
ராமதாஸ் வழியில் எல்லோரும் நடக்க வேண்டும். அன்புமணியை கட்சியில் முன்னிலைப்படுத்தி, முதல் வேட்பாளர் என அறிவித்துள்ளோம். அன்புமணியை வலிமைப்படுத்தியுள்ளோம். இரு சக்திகளும் ஒன்றாக சேர்ந்தால்தான் வலிமையாக இருக்கும். இல்லையென்றால் நலிவு தான் ஏற்படும். மாற்று கட்சியினர் பா.ம.க.,வில் தலையீடு என்கிற செய்தி வரவில்லை. என்று ஜி.கே.மணி கூறினார்.