/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளியில்ராமானுஜம் பிறந்த நாள் விழா
/
வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளியில்ராமானுஜம் பிறந்த நாள் விழா
வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளியில்ராமானுஜம் பிறந்த நாள் விழா
வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளியில்ராமானுஜம் பிறந்த நாள் விழா
ADDED : டிச 24, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளியில், கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் கணித பாடம் குறித்த கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் சோழன், கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில், 200க்கும் மேற்பட்ட கணித மாதிரிகளை, மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
கண்காட்சியை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். சிறந்த மாதிரிகளை உருவாக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில், தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்விராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.