ADDED : ஜன 13, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: முகையூர் பகுதியில் ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீ சார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த முகையூர் பகுதியில், விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருக்கோவிலுார் மெயின் ரோடு வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 21 மூட்டை களில் 1,050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.
ரேஷன் அரிசியை கடத்தி வந்த விக்கிரவாண்டி அடுத்த நல்லாபாளையத்தைச் சேர்ந்த மணி மகன் முருகன், 35; என்பவரை கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

