ADDED : ஜூன் 12, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; நல்லான்பிள்ளைபெற்றாள் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் முரளி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் குமரவேல் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி தலைவர் ரஞ்சித்குமார், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதிகள் கதிரவன், அய்யாதுரை, மகளிர் அணி சுதா பாஸ்கரன் பங்கேற்றனர். விற்பனையாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.