ADDED : ஆக 21, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் செய்தனர். கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலக ரேஷன் கடை ஊழியர்கள் பில்லிங் மிஷின் சரிவர வேலை செய்யாததை கண்டித்து போராட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பாண்டியராஜன் வரவேற்றார். அரசால் வழங்கப்பட்ட ‘பில்லிங்’ மிஷின் சரிவர வேலை செய்யாததால் பொதுமக்களிடம் வாக்குவாதம் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.
எனவே அதை திரும்பவும் அரசிடமே ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதில் வட்ட நிர்வாகிகள் விஜய், ஏழுமலை, ராமச்சந்திரன், கலைமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனந்த்ராஜ் நன்றி கூறினார்.
