/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மழையால் பாதித்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள்' கூட்டுறவு, உணவு துறை முதன்மைச் செயலர் தகவல்

ADDED : டிச 04, 2024 08:32 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில், கூட்டுறவு, உணவு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 24க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏரிகள் உடைப்பால் அத்தியாவசிய தேவையான அரிசி தண்ணீரில் அடித்துச் சென்றதால், ரேஷன் கடைகளை திறக்க கூறியுள்ளோம். இந்த பகுதிகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் பலரின் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தான் சில கடைகளை திறப்பதில் பிரச்னை இருந்தது. தற்போது அனைத்து ரேஷன் கடைகளையும் திறக்க கூறியுள்ளோம்.
மழையால் பாதித்த குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ சக்கரை, பருப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இனி வரும் பேரிடர் காலங்களில் அந்தந்த பகுதிகளில் 24 மணி நேரம் செயல்படும் கிச்சன் வாகனங்கள் ஏற்பாடு செய்து உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மழை பாதிப்பால் சுகாதார கேடு வராமல் இருக்க பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி நடக்கிறது. உயிர் சேதம், பொருள் சேதம், அரசு சொத்துகள், வேளாண் பொருட்கள் சேதம் கணக்கிடப்படுகிறது.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார். கூட்டுறவு சார் பதிவாளர் சுப்பையன் உடனிருந்தார்.