/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிக புத்தகங்கள் வெளி்யிடும் சாதனை நிகழ்ச்சி
/
அதிக புத்தகங்கள் வெளி்யிடும் சாதனை நிகழ்ச்சி
ADDED : மே 26, 2025 12:34 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள கோலியனுார் ஜான்டூயி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஒரே நாளில் அதிகபட்ச எழுத்தாளர்கள் பங்கேற்று, அதிக புத்தகங்களை வெளியிடும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் நிறுவனர் பிருந்தா ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், 113 எழுத்தாளர்கள் பங்கேற்று, 150 புத்தகங்களை வெளியிட்டனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதினரும் இதில் பங்கேற்று தங்களின் படைப்புகளை வெளியிட்டனர்.
இந்தியாவின் துணிச்சலான வீரர்களுக்கு எழுத்தாளர்கள் வீரவணக்கம் செலுத்தினர். இந்தியா வரைபடம் வடிவில் புத்தகங்கள் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்ககம் இணை இயக்குநர் (தொழில் முறை) விஜயக்குமார், ஜான்டூயி குழும நிறுவனங்கள் தலைவர் வீரதாஸ், சிதம்பரம் பள்ளி முதல்வர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சாதனை இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.