/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை
/
முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை
முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை
முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை
ADDED : நவ 13, 2025 06:56 AM

விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி வேலூர் எஸ் டி ஏடி மைதானத்தில் நடந்தது. இதில் முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அரவிந்தன், 17; சுரேஷ், 17; பால் ரகுநாத், 17; ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக வாலிபால் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும், பரிசுத் தொகை ரூபாய் 75ஆயிரத்தையும் வென்றனர். நேற்று பள்ளிக்கு வருகை தந்த சி.இ.ஓ ., அறிவழகன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெய செல்வி, ஜேக்கப் ஜீவானந்தம், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.