ADDED : நவ 16, 2025 03:34 AM
செஞ்சி: செஞ்சி ஒன்றிய சாதாரண கூட்டம் சேர்மன் விஜயகுமார் தலைமையில் நடந்தது.
பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் படிக்கப்பட்டன. 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தேர்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து பேசிய ஒன்றிய சேர்மன், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றிட வாய்ப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
அ.தி.மு.க., கவுன்சிலர் துரை தனது பகுதியில் பொது நிதியில் செய்யும் வேலைகளை தனக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். என்ன பணிகள் வேண்டும் என எழுதி தருமாறு சேர்மன் கேட்டுக்கொண்டார்.
துணை சேர்மன் ஜெயபால் கவுன்சிலர்கள் பச்சையப்பன், கேமல், டிலைட், செண்பக பிரியா, கமலா, புவனா, முரளி, மல்லிகா, பனிமலர், ஞானாம்பாள், உமாமகேஸ்வரி, பங்கேற்றனர். துணை பி.டி.ஓ., சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

