/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்டல கலை பண்பாட்டு மையம் : கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை
/
மண்டல கலை பண்பாட்டு மையம் : கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை
மண்டல கலை பண்பாட்டு மையம் : கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை
மண்டல கலை பண்பாட்டு மையம் : கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை
ADDED : அக் 26, 2025 10:41 PM

விழுப்புரம்: கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் கலை பயிற்சி பட்டறை விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேடை நாடக கலைஞர் சத்தியராஜ் தலைமை தாங்கினார்.
கலைஞர்கள் பழனி, சந்திரசேகர், செல்வம், ஜெகதீசன், செந்தில், கவிதா உத்திரமணி முன்னிலை வகித்தனர். மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குநர் ராஜாராமன் கலை பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கூறியதோடு, மேடை, நையாண்டி, பம்பை, தெருக் கூத்து, கும்மி கோலாட்டம் கலைஞர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
இந்த கலை தொடர்பான பயிற்சியை, தஞ்சாவூர் ஜவகர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலர் வடிவேல் ஒருங்கிணைத்தார். பம்பை கலைஞர் பாலு நன்றி கூறினார்.