/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் வாலிபர் பலி உறவினர்கள் போராட்டம்
/
மின்சாரம் வாலிபர் பலி உறவினர்கள் போராட்டம்
ADDED : ஜூலை 03, 2025 01:21 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மின்சாரம் தாக்கி இறந்த வாலிபரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தி
உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம், வி.மருதுாரை சேர்ந்தவர் கன்னியப்பன், 28; விழுப்புரம், தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் வாட்டர் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை பணியின் போது, மின்சாரம் தாக்கி இறந்தார்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, கன்னியப்பன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி, அவரது மனைவி இந்து, விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தாவிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், 'எனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது. 3 டாக்டர்கள் கொண்ட குழு எனது கணவரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்து, அதன் வீடியோ பதிவை என்னிடம் கொடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, மறுபிரேத பரிசோதனை செய்யும் வரை அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.