ADDED : பிப் 26, 2024 11:14 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம் : திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி இறந்த பள்ளி மாணவரின் பெற்றோரிடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,நிவாரண உதவி வழங்கினார்.
திண்டிவனம், பெலாக்குப்பம் ரோடு, பாரதிதாசன்பேட்டையைச் சேர்ந்தவர் மாரி. கூலித்தொழிலாளி.
இவரது மகன் தெய்வேந்திரன், 9; இவர், கடந்த 23ம் தேதி மாலை வீட்டிற்கு அருகிலுள்ள நகராட்சி மினி டேங்க்கில் தண்ணீர் பிடிப்பதற்காக அங்குள்ள மின் மோட்டாரின் சுவிட்ச்சை போட்ட போது மின்சாரம் தாக்கி இறந்தார்.
உயிரிழந்த மாணவரின் பெற்றோரை திண்டிவனம் எம்.எல்.ஏ.,அர்ஜுனன் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.
திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.
