/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க.,நிர்வாகிக்கு நிவாரண உதவி
/
பா.ம.க.,நிர்வாகிக்கு நிவாரண உதவி
ADDED : டிச 08, 2024 04:53 AM
திண்டிவனம் : தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பா.ம.க., நிர்வாகிக்கு ரூ.ஒரு லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.
திண்டிவனத்தில் பெஞ்சல் புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நாகலாபுரம் பகுதியை பா.ம.க.,மாநில தலைவர் அன்புமணி நேரில் சென்று பார்வையிட்டார். இதில் விழுப்புரம் மாவட்ட பா.ம.க.,பொருளாளர் கவிதாவின் வீட்டிற்கு சென்று அன்புமணி பார்வையிட்ட போது, அவர் வீட்டில் தண்ணீர் புகுந்ததால் வீட்டிலிருந்த உடமைகள் பாதிக்கப்பட்டதாக கவிதா தெரிவித்தார்.
இதன் பேரில் அன்புமணி உத்தரவின்பேரில் மயிலம் எம்.எல்.ஏ.,சிவக்குமார், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர், கவிதாவிற்கு ரூ.ஒரு லட்சம் நிவாரண உதவி வழங்கினர். இதில் திண்டிவனம் நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.