sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ளத்தில் அடித்துச்சென்ற கால் நடைக்கும் நிவாரணம்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

/

வெள்ளத்தில் அடித்துச்சென்ற கால் நடைக்கும் நிவாரணம்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

வெள்ளத்தில் அடித்துச்சென்ற கால் நடைக்கும் நிவாரணம்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

வெள்ளத்தில் அடித்துச்சென்ற கால் நடைக்கும் நிவாரணம்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : டிச 20, 2024 04:54 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், புயல் கனமழை வெள்ளத்தில் அடித்துச்சென்று உயிரிழந்த கால்நடைகளையும் கணக்கில் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த பெஞ்சல் புயல் கனமழை மற்றும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடும் சேதம் ஏற்பட்டது. 17 பேர் இறந்தனர். 350 வீடுகள் முழுதும் இடிந்தும், 3,500 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மூழ்கின. 72 ஆயிரம் விவசாயிகள் வரை பாதிக்கப்பட்டனர்.

கால்நடைகளில் 581 ஆடுகள், 183 பசு மாடுகள், 173 கன்றுகுட்டிகள், 2.30 லட்சம் கோழிகளும் உயிரிழந்தன.

வெள்ள சேதம் குறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக கணக்கீடு செய்து, தமிழக அரசு அறிவித்தபடி படிப்படியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளம் பாதித்ததாக 5 லட்சம் குடும்பத்திற்கு 2,000 ரூபாய் வழங்கப்பட்டு, அவர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகளும் கணக்கிடப்பட்டு, நிவாரணம் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

வெள்ளத்தில் இறந்த கால்நடை இழப்பீடுகளுக்கு, அரசு விதிகள்படி, வருவாய்த்துறை மற்றும் கால்நடைத் துறையினர் ஆய்வு செய்து, இழப்பீடு கணக்கு வழங்கியுள்ளனர்.

உயிரிழந்த கால்நடைகளுக்கு பிரேத பரிசோதனை செய்து, கால்நடைத்துறை சான்றளித்த பிறகே நிவாரணம் வழங்கப்படுகிறது.

அதன்படி, மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்து இறந்த 28 பசுக்கள், 6 எருமைகள், 135 கன்றுகுட்டிகள், செம்மறி ஆடுகள் 201, வெள்ளாடுகள் 217, கோழிகள் 1.75 லட்சம் கோழிகள் என பிரேத பரிசோதனை அறிக்கை கால்நடைத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை வெள்ளத்தின்போது, குறிப்பாக தென்பெண்ணை, மலட்டாறு, வராகநதி, பம்பை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், திருவெண்ணைநல்லுார், காணை, விக்கிரவாண்டி, விழுப்புரம் வட்டாரத்தில் அதிகளவில் கிராமங்களில் சேதம் ஏற்பட்டது. திடீரென அதிகாலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குறிப்பாக ஆடு, மாடுகள், கோழிகள், வாத்துகள், நாய்கள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன.

இதில், வெள்ள நீரில் மூழ்கி இறந்த ஆடு, மாடுகளுக்கு அடையாளம் கண்டு நிவாரணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், ஏராளமான ஆடுகள், கன்று குட்டிகள், ஆற்றங்கரையோரமிருந்த கோழி பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகள், பண்ணை வாத்துகள் அடித்துச் செல்லப்பட்டன.

அந்த வகையில், அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போன கால்நடை களுக்கு, புள்ளி விவரங்கள் சேகரித்து நிவாரணம் வழங்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏராள மான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டும், இறந்த கால்நடைகளும் உடனே புதைக்கப்பட்டது.

ஆனால், அதனை கணக் கெடுக்காததால், சிறு விவசாயிகள் பலர் வாழ்வாதாரம் இழந்து பாதித்துள்ளனர். இதனால், இறந்த கால்நடைகள் குறித்தும், முறையாக கணக்கெடுத்து, அரசு தரப்பில் முழு நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us