/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில் இறந்த மாணவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கல்

ADDED : பிப் 23, 2024 03:41 AM

செஞ்சி: பஸ் கவிழ்ந்து இறந்த பள்ளி மாணவர் குடுப்பத்திற்கு அரசு நிவாரண தொகையாக 2 லட்சம் ரூபாயை ஒன்றிய சேர்மன் வழங்கினார்.
செஞ்சி அடுத்த மேல்சேவூர் மதுரா கட்டஞ்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பிரவீன் குமார், 17; இவர், ரெட்டணை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் வீடு திரும்பும் போது பஸ் கவிழ்ந்த விபத்தில் இறந்தார்.
இவரது குடும்பத்திற்கு முதல் அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் லட்சமும், காயமடைந்த ஜெயராஜ் மகன் வீனேஷ், 16; குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் வங்கி வரைவோலையை வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் நேற்று மாலை வழங்கினார்.
தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ., ஆனந்ததாஸ், ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர் கம்சலா மாரிமுத்து, ஊராட்சி தலைவர் ராஜகோபால், ஆர்.ஐ., சிவக்குமார், வி.ஏ.ஒ., சிவகார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.