sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி இறந்த சகோதரர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்

/

மின்சாரம் தாக்கி இறந்த சகோதரர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்

மின்சாரம் தாக்கி இறந்த சகோதரர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்

மின்சாரம் தாக்கி இறந்த சகோதரர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்


ADDED : அக் 28, 2025 06:10 AM

Google News

ADDED : அக் 28, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த இருவரது குடும்பத்திற்கு, அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில், கடந்த மாதம் 19ம் தேதி கரும்பு வெட்டும் போது, முகையூர் அடுத்த கொங்கநல்லுார் ராமச்சந்திரன், 36; அவரது தம்பி சின்னராசு, 30; ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் இறந்தனர்.

இவர்களின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் நிவாரணத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கிட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதேபோல், திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியைச் சேர்ந்த செந்தில் மகன் எத்திராஜ், 16; கடந்த 11ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பெண்ணையாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.

இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, அரசு நிவாரண தொகையை, பொன்முடி எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.






      Dinamalar
      Follow us