/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் கல்லுாரியில் மத நல்லிணக்க விழா
/
மகளிர் கல்லுாரியில் மத நல்லிணக்க விழா
ADDED : டிச 14, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், மத நல்லிணக்க விழா நடந்தது.
கல்லுாரி கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர் பேரவைத் தலைவர் ஜமின் மிஹ்ராஜி வரவேற்றார். புதுச்சேரி மென் திறன் பயிற்சியாளர் யோகா மற்றும் தியான ஆசிரியர் சுஜாதா பாலசுப்ரமணியன் ஆன்மிகத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கினார்.
கல்லுாரி முதல்வா் கலைமதி, மத நல்லிணக்கத்தின் சிறப்பு, தன்மை, செயல்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை விளக்கினார். நிகழ்ச்சியில் மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
வணிகவியல் துறை மாணவர் பேரவை தலைவர் மதுமிதா நன்றி கூறினார்.

