/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க... தயக்கம்; போலீசாரின் அலட்சியத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு
/
விதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க... தயக்கம்; போலீசாரின் அலட்சியத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு
விதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க... தயக்கம்; போலீசாரின் அலட்சியத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு
விதி மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க... தயக்கம்; போலீசாரின் அலட்சியத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு
ADDED : செப் 09, 2025 02:21 AM

விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசார் அலட்சியம் காட்டுவதால் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாலைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு என சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளையும் அரசு ஏற்படுத்தி உள்ளது. இவை கட்டுப்பாடுகள் மட்டுமின்றி விபத்துக்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இந்த விதிமுறைகளை கடை பிடிக்காமல் செல்வது சட்டத்தை மீறிவது மட்டும் இன்றி விபத்து ஏற்படுத்துவதற்கான அடிப்படை காரணமாக அமைந்து விடுகிறது. விதிமுறைகள் படி பெரும்பான்மை வாகனங்கள் இயங்கினாலும், விதி முறைகளை கடை பிடிக்காத சில வாகனங்களாலேயே விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.
அதிக சத்தம் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள், கிராமங்களில் இயங்கும் ஆட்டோக்கள் சில வற்றில் அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்துள்ளனர். இவர்கள் பயணிகளை ஏற்றி கொண்டு அதிக சத்தத்துடன் பாடல்களை பாட விட்டு ஆட்டோக்களை ஓட்டி செல்கின்றனர். பின்னால் வரும் வாகனங்கள் வழி கேட்டு ஒலி எழுப்பினாலும் அதிக சத்தத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இது கேட்பதில்லை. நகர புறங்களில் மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசல் உள்ள இடங்களிலும் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்வதால் மற்றவர்களின் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆட்டோகள் மட்டுமின்றி சில டிராக்டர்களிலும் அதிக சத்தம் எழுப்பும் பாடல்களை ஒலிக்க செய்து அதிவேகமாக செல்கின்றனர்.
ரிப்ளக்டர்கள் இல்லை இரவு நேர விபத்துக்களை தடுக்க வாகனங்களில் பின்பக்கம் எரியும் சிகப்பு விளக்கு பொருத்தப்படும். பெரும்பாலான டிராக்டர் டிப்பர், டிப்பர் லாரிகளில் சிகப்பு விளக்கு எரிவதில்லை. அத்துடன், ரிப்ளட்டர்களும் இருப்பதில்லை. இதே போல் மாட்டு வண்டிகளிலும் ரிப்ளட்டர்கள் இல்லை. ஏராளமான இருசக்கர வாகனங்களிலும் சிகப்பு விளக்கோ, ரிப்ளக்டர்கள் இருப்பதில்லை. இத்தகைய வாகனங்கள் முன்னாள் செல்வது, எதிரே வரும் வாகனங்களின் ஹைபீம் வெளிச்சத்தில் தெரிவதில்லை. இதனால் ரிப்ளக்டர் இல்லாத வாகனங்களில் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.
இரட்டை டிப்பர்கள் இரட்டை டிப்பர்களுடன் செல்லும் டிராக்டர்கள் கட்டுப்பாடின்றி வேகமாக ஓட்டி செல்கின்றனர். பொதுவாக ஒரு டிப்பர் மட்டுமே இருக்கும் என நினைத்து, இரு சக்கர வாகன ஓட்டிகள், டிப்பர் கடக்க முயற்சித்து முந்திச் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றனர்.
நம்பர் பிளேட் இல்லை சமீபகாலமாக நம்பர் பிளேட் இன்றி, நம்பர் பிளேட் இருந்தும் அதில் முழுவதுமாக பதிவு எண் இன்றி, அரசியல் கட்சி பெயர், கட்சி சின்னத்துடனும் ஏராளமான வாகனங்கள் உலா வருகின்றன. இந்த வாகனங்களை போலீசார் கண்டு கொள்வதே கிடையாது. இது போன்ற வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு சென்றாலும் வாகன எண் இல்லாமல் இருப்பதால் குறிப்பிட்டு புகார் செய்ய முடியாத நிலை உள்ளது.
போலீசார் அலட்சியம் வாகன தணிக்கை செய்யும் போலீசார், ஹெல்மெட் அணியாதவர், லைசென்ஸ் இல்லாதவர், இன்சூரன்ஸ் இல்லாதவர்களை மட்டும் கண்காணித்து அபராதம் வசூலிக்கின்றனர். வாகனங்களில் சிகப்பு விளக்கு எரியாமல் இருப்பது, ரிப்ளக்டர் இல்லாமல் இருப்பதையும், நம்பர் பிளேட் இல்லாமல் இரு ப்பதையும் கண்டு கொள்வதில்லை. இந்த அலட்சியம் காரணமாக விதி முறைகளை மீறும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை தடுக்க போலீசார் வாகன தணிக்கையின் போது நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள், சிகப்பு விளக்கு எரியாமலும், ரிப்ளக்டர் இல்லாமலும் வரும் வாகனங்கள் மீதும், அதிக சத்ததுடன் பாடல்களை ஒலிக்க வைக்கும் டிராகடர்கள், ஆட்டோக்கள் மீதும் உறிய நடவடிக்கை எடுக்க வேண்டு ம்.
- நமது நிருபர் -