/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் புதர்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : நவ 22, 2024 06:40 AM

வானுார்: 'தினமலர்' செய்தி எதிரொலியால் இரும்பை - ஆலங்குப்பம் சாலையில் இருபக்கமும் சாலையை ஆக்கிரமித்திருந்த முட்புதர்களை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் இருந்து இரும்பை கிராமம் வழியாக ஏராளமான கிராம மக்கள் சென்று வருகின்றனர். இது மட்டுமின்றி சென்னை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பைபாஸ் வழியாக வரும் வாகனங்களும் இந்த சாலை வழியாக ஆரோவில் பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்த சாலையில், இரும்பை மகாகாளேஸ்வரர் கோவில் துவக்கத்தில் இருந்து ஆலங்குப்பம் எல்லை வரை இருபுறமும், புதர் மண்டி சாலையை ஆக்கிரமித்திருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று வானுார் வட்ட நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள், புதர்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.