/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மார் 18, 2026 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை டிராபிக் போலீசார் அகற்றினர்.
விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில் இருந்து, ரயில் நிலையம் வரை சாலையோர நடைபாதை கடைகள் அதிகரித்துள்ளது. இதனால், நேருஜி சாலை மற்றும் கிழக்கு பாண்டி ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் நேற்று ஈடுபட்டனர்.
இதில், சாலையோரத்தில் இருந்த கரும்பு ஜூஸ் கடை, பழக்கடைகள் உள்ளிட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

