/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 15, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பள்ளையத்தம்மன் மற்றும் பூரணி பொற்கலை உடனுறை ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று 14ம் தேதி காலை 6:.00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 8:45 மணிக்கு புதுச்சேரி திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார் தலைமையில் மகா கும்பாபிஷேகமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆழியூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.