/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேணுகா பரமேஸ்வரி கோவில் இன்று கும்பாபிஷேகம்
/
ரேணுகா பரமேஸ்வரி கோவில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஜன 19, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், பானாம்பட்டில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.
இதற்கான விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, தீப லட்சுமி பூஜை, கன்னிகா பரமேஸ்வரி, சுமங்கலி, வடுக, ஸ்ரீயந்திர பூஜைகள் நடைபெற்றது. மூன்றாம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு புண்யாவாசனம், நான்காம் காலயாக பூஜை, தத்வார்ச்சனை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து காலை 10 மணிக்கு கடம் புறப்பாடாகி, 10.30 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.

