/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம் சீரமைப்பு

ADDED : டிச 10, 2024 07:04 AM

திண்டிவனம்,: திண்டிவனம் கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட தரைப்பாலத்தில், தற்காலிகமாக பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியிலுள்ள ஏரி கடந்த 1ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் அடியோடு அடித்துச் சென்றது.
இதனால் கிடங்கல் பகுதியை சேர்ந்த மக்கள் சுற்றிக் கொண்டு நகர பகுதிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும், ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதியிலுள்ள தண்ட வாளத்தை கடந்து ஆபத்தான நிலையில் வரவேண் டிய நிலை இருந்தது.
இந்நிலையில், கிடங்கல் ஏரி உடைப்பால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
பாலம் உடைந்த பகுதியில் பெரிய குழாய் பொருத்தப்பட்டு ஏரி நீர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டு அதன்மேல் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்லும் வகையில் பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது.
புதிய தரைப்பாலம் நகராட்சி சார்பில் விரைவில் கட்டப்பட உள் ளது. அதுவரை தற்காலிக பாலத்தை பயன்படுத்தும் படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.