தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குடியரசு தின விழா

 குடியரசு தின விழா

 குடியரசு தின விழா


ADDED : ஜன 27, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி, மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி தலைமை தாங்கினார்.

இயக்குனர் சாந்தி பூபதி முன்னிலை வகித்தனர். சி.இ.ஓ., மணிகண்டன் வரவேற்றார். கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சி.பி.எஸ்.சி., முதல்வர்கள் தனலட்சுமி, ரத்னா, கல்லுாரி முதல்வர்கள் கோவிந்தராஜ், முருகதாஸ், சசிகுமார், செந்தில்குமார், விஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி ஒன்றியம் அலுவலகத்தில் பி.டி.ஓ., சையது முகமது தலைமையில் ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பி.டி.ஓ., நாராயணன், மேலாளர் கலைவாணி, உதவியாளர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் ரவிதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கி தேசியக் கொடி ஏற்றினார். துணை சேர்மன் பாலாஜி, இளநிலை உதவியாளர் ராஜேஷ், நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி தேசியக் கொடியேற்றி வைத்தார். துணை சேர்மன் விமலா முருகன், பி.டி.ஓ.,க்கள் ரங்கசாமி, சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷபி, பழனிவேல், அந்தோணியம்மாள் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், கவுன்சிலர்கள் உட்பட பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப் பதிவாளர்கள் ரகு, குறிஞ்சி மணவாளன், சாந்தி (பொது விநியோக திட்டம்) முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கூட்டுறவு சங்க வளாகத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டது. அலுவலக கண்காணிப்பாளர்கள் சவிதாராஜ், சசிகலா மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

மயிலம் மயிலம் பி.டி.ஒ., அலுவலகத்தில் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி தேசியக் கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், இளங்கோவன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கண்ணன், செல்வக்குமார் வரவேற்ற னர். இதில் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங் கேற்றனர்.

திண்டிவனம் திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், மேலாளர் நெடுமாறன் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, காந்தி சிலைக்கு நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த விழாவில், தாளாளர் சரவணன் தேசிய கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர் நித்தின் சரவணன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us