/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடியரசு தின அணிவகுப்பு: போலீசார் ஒத்திகை
/
குடியரசு தின அணிவகுப்பு: போலீசார் ஒத்திகை
ADDED : ஜன 25, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் குடியரசு தின விழாவுக்காக போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், குடியரசு தின விழா 26ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடக்க உள்ள குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.
காவல் துறை சார்பில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. நேற்று மாலை, விழுப்புரம் ஆயுதப்படை டி.எஸ்.பி., ஜோசப் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான ஆயுதப்படை பிரிவு போலீஸ் குழுவினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.